முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இரவில் வந்த போன்கால்.. தொல்லை கொடுத்த நடிகை.. அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து ஓபனாக பேசிய நடிகர்!

இரவில் வந்த போன்கால்.. தொல்லை கொடுத்த நடிகை.. அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து ஓபனாக பேசிய நடிகர்!

ரவி கிஷன்

ரவி கிஷன்

பிரபல பாலிவுட் நடிகர் ரவி கிஷனுக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் வாய்ப்பு தேடி அலைந்த போது பிரபல நடிகை தன்னை அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ரவி கிஷன் தெரிவித்துள்ளார்.

சினிமா நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட பலரும் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றனர். பெண்களுக்கு மட்டும் தான் சினிமாவில் இது போன்று பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் இருப்பதாக பார்த்தால் நடிகர்களுக்கும் அதை விட மோசமாக சினிமா ஹீரோயின்களே டார்ச்சர் கொடுப்பதாக திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் ரவி கிஷன்.

1992ம் ஆண்டு பீதாம்பரி எனும் படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரவி கிஷன். தெலுங்கு, தெரே நாம், டானு வெட்ஸ் மனு பாலிவுட் மற்றும் போஜிபுரி படங்களில் நடித்துள்ளார். டி. ராஜேந்தரின் மோனிஷா என் மோனலிசா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்தில் நடித்திருக்கிறார். படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது போஜ்புரி ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருக்கும் ரவி கிஷன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், பேசிய ரவி கிஷன், ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகர் என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு வேண்டாம் என மறுத்தேன்.

ஆனால், அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் நினைவுக்கு வந்தது. அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது என்று கூறியுள்ளார். மேலும் அந்த பிரபலம் யார் என்பதை சொல்ல விருப்பம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Entertainment