முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரசிகரை இழுத்து வீசிய பாதுகாவலர்.. பதறிப்போன ராஷ்மிகா.. செல்ஃபிக்காக நடந்த பரபர சம்பவம்!

ரசிகரை இழுத்து வீசிய பாதுகாவலர்.. பதறிப்போன ராஷ்மிகா.. செல்ஃபிக்காக நடந்த பரபர சம்பவம்!

ராஷ்மிகா

ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனாவுடன் செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது தெலுங்கில் கீதா கோவிந்தம், புஷ்பா என தொடர் வெற்றிப்படங்களாக கொடுத்து முன்னணி நாயகியாக உயர்ந்தார். தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் விஜய்யுடன் தான் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவு நினைவானதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

தற்போது அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் அனிமல் என்ற படத்தில் ரன்பீருக்கு ஜோடியாக நடித்துவருகிறார். மேலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!




 




View this post on Instagram





 

A post shared by Manav Manglani (@manav.manglani)



இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நேற்று மும்பையில் ஒரு நிகழ்வில் கலந்தகொண்டார். இந்த நிலையில் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்தனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவுடன் செல்ஃபி எடுக்க போனை தூக்கி பிடித்தபடியே அவர் முன்னே வந்தார். அப்போது அவருடன் வந்த பார்டிகார்டுகள் ரசிகரை இழுத்து வெளியே தள்ளினர்.

top videos

    இதனை பார்த்து பதறிபோய் அவரை விடுங்கள் என்பது போல் செய்கை செய்தார். இதனையடுத்து அவரைத் தொடர்ந்து ஓடி வந்த ரசிகை ஒருவர் ராஷ்மிகாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்க, அவருக்கு பொறுமையைாக போஸ் கொடுத்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

    First published:

    Tags: Actress Rashmika Mandanna