முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை... கண்பார்வை குறைபாடு - இளம் வயதில் இவ்வளவு பிரச்னையா? அதிர வைத்த ராணா

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை... கண்பார்வை குறைபாடு - இளம் வயதில் இவ்வளவு பிரச்னையா? அதிர வைத்த ராணா

நடிகர் ராணா

நடிகர் ராணா

இதனால் பக்கவாதம் ஏற்பட 70 சதவிகித வாய்ப்பு இருந்ததாகவும் இறந்து போக 30 சதவிகித வாய்ப்பு இருந்ததாகவும் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்தாக ராணா குறிப்பிட்டிருக்கிறார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகுபலி படத்துக்கு பிறகு இந்திய அளவில் பிரபலமானவர் ராணா டகுபதி. பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரர் மகனான இவர், தமிழில் ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்திருந்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கிறார். மேலும் இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கோ ஆர்டினேட்டராக நடிகர் அஜித்தின் திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் தனது சித்தப்பா வெங்கடேஷுடன் இணைந்து ராணா நாயுடு என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு சிறுவயதில் இருந்த ஒரு கண் பார்வை குறைபாடு குறித்தும் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் குறித்தும் பேசியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

அந்தப் பேட்டியில், ‘இளம் வயதில் தனது வலது கண்ணில் பார்வை குறைபாடு இருந்ததாகவும் இதனையடுத்து கண்களில் கார்னியல் டிரான்ஸ்பிளான்ட் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் சமந்தாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு திடீரென பிபி அதிகரித்து இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரகம் செயலிழந்ததாக குறிப்பிட்டார்.

இதனால் பக்கவாதம் ஏற்பட 70 சதவிகித வாய்ப்பு இருந்ததாகவும் இறந்து போக 30 சதவிகித வாய்ப்பு இருந்ததாகவும் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்தாக குறிப்பிட்டிருக்கிறார். சிறிது உடல் ஏற்பட்டாலும் துவண்டு போகும் நிலையில் இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகும் மனம் தளராமல் இருந்துவருவதாக ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.

First published:

Tags: Rana Daggubati