நடிகை ரம்பா 1990-களில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். பல இந்தி படங்களிலும் பணியாற்றினார். இவர் சமீபத்தில் தனது மூத்த மகளின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் உடனடியாக வைரலானது. தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக படங்களைப் பார்த்த ரசிகர்கள் தெரிவித்தனர்.
ரம்பா தனது மகள் லாண்யா மேடையில் பாடி, பரிசு பெற்ற சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டார். அதில் அவர் டிரடிஷனல் உடையில் கண்ணாடி அணிந்திருப்பதைக் காண முடிந்தது. இரட்டை ஜடை, மல்லிகை பூ என பார்ப்பதற்கு அப்படியே ரம்பா போலவே இருந்தார் அவரது மூத்த மகள் லான்யா.
இந்தப் படம் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் கமெண்ட் பகுதிகளில், இந்தப் படங்களைப் பார்க்கும்போது ரம்பா அவரது பள்ளி நாட்களில் இருந்ததைப் போல உணர முடிகிறது என்று சுட்டிக்காட்டினர்.
"மினி ரம்பா அற்புதம்", "இந்தப் படம் உங்கள் நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தை நினைவுப் படுத்துகிறது" என்றெல்லாம் கமெண்டுகளில் தெரிவித்தனர். அதோடு, “உங்களின் ஜெராக்ஸ்”, “உங்கள் க்ளோன்” என்றெல்லாம் கமெண்டுகளைப் பார்க்க முடிந்தது.
View this post on Instagram
1993-ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான சர்வர் சோமன்னா படத்தின் மூலம் ரம்பா அறிமுகமானார். தெலுங்கில் அவர் அறிமுகமான படம் ஆ ஒக்கட்டி அடக்கு. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்கள் தவிர, இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி போன்ற பல்வேறு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் ரம்பா. தமிழில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல பிரபல நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார்.
2010-ல் கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை மணந்தார். அதற்குப் பிறகு, தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான மானாட மயிலாட மற்றும் தெலுங்கு நடன நிகழ்ச்சியான டீ போன்ற சில ரியாலிட்டி ஷோக்களில் அவர் நடுவராக பங்கேற்றார். இந்தத் தம்பதியருக்கு லாண்யா, சாஷா, ஷிவின் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Ramba, Cinema, Entertainment, Tamil News