ராம் கோபால் வர்மா தெலுங்கு சினிமாவில் குறிப்பிடத் தகுந்த இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்குநராக அறிமுகமான சிவா படம் பலருக்கும் இனஸ்பிரேஷனாக இருந்து வருகிறது. தமிழில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான திருடா திருடா படத்துக்கு மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதியிருந்தார். தெலுங்கு மட்டுமல்லாமல் ரங்கீலா உள்ளிட்ட ஏராளமான ஹிந்தி படங்களையும் ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கிறார்.
சூர்யா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ரத்த சரித்ரா 2 படத்தையும் ராம் கோபால் வர்மா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
Super thrilled to receive my B tech degree today 37 years after I passed , which I never took it in 1985 since I wasn’t interested in practicing civil engineering..Thank you #AcharyaNagarjunaUniversity 😘😘😘Mmmmmmuuaahh 😍😍😍 pic.twitter.com/qcmkZ9cWWb
— Ram Gopal Varma (@RGVzoomin) March 15, 2023
சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் சிவராஜ்குமார் நடிப்பில் ஒரு படத்தையும் அவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் சமயத்தின்போது அடல்ட் படங்களை ராம் கோபால் வர்மா இயக்கி தனது ஆர்ஜிவி வேர்ல்டு என்ற ஓடிடி பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் 37 வருடங்களுக்கு பிறகு பிடெக் டிகிரியை வாங்கியதைக குறிப்பிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவரது பதிவில், 37 வருடங்களுக்கு பிறகு நான் தேர்ச்சி பெற்ற பிடெக் படிப்புக்கான டிகிரி சான்றிதழைப் பெற்றேன். நான் சிவில் இன்ஜினியராக பணி செய்ய விருப்பமில்லாததால் அப்போது இந்த சான்றிதழை வாங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ram gopal varma