முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நான் விராட் கோலி மாதிரி இருக்கேன்... அவரது பயோபிக்கில் நடிக்க ஆசை - ராம் சரண் விருப்பம்

நான் விராட் கோலி மாதிரி இருக்கேன்... அவரது பயோபிக்கில் நடிக்க ஆசை - ராம் சரண் விருப்பம்

நான் விராட் கோலி மாதிரி இருக்கேன்... அவரது பயோபிக்கில் நடிக்க ஆசை - ராம் சரண் விருப்பம்

சமீப காலமாக இந்திய அளவில் பயோபிக்குகள் படமாக்கப்படுவது டிரெண்டாக இருந்துவருகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படமான ஆர்ஆர்ஆர் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளது. மரகதமணி இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து இந்திய அளவில் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு ராம் சரண் அளித்த பேட்டியில், விளையாட்டை மையமாக கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். நான் கோலியைப் போன்றே தோற்றம் கொண்டுள்ளதால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக இந்திய அளவில் பயோபிக்குகள் படமாக்கப்படுவது டிரெண்டாக இருந்துவருகின்றன. நிஜ சம்பவத்தின் பாதிப்பில் உருவான சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் சூர்யா நடித்திருந்தார். அந்தப் படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தன.

தமிழ் மட்டுமல்லால் தெலுங்கு, ஹிந்தியிலும் பயோபிக்குகள் அதிகளவில் வெளிவருகின்றன. மேலும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.தோனி அன்டோல்டு ஸ்டோரி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் என பல பயோபிக்குகள் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

First published:

Tags: Ram Charan, Virat Kohli