முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''எனது நீண்ட கனவு... விரைவில் நடக்கும்...'' ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல்

''எனது நீண்ட கனவு... விரைவில் நடக்கும்...'' ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இப்பொழுது எனக்கு இங்கு ஒரு நாடகத்தை உருவாக்கும் பெரும் கனவு இருக்கிறது. விரைவில் அது நடக்கும் என்றும் நம்புகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Mumbai, India

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் மையத்தில் நீடா -முகேஷ் அம்பானியின் கல்சுரல் சென்டரின் பிரமாண்டமான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இது நீடா அம்பானியின் கனவுத் திட்டம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து 3 நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

இந்த கலாச்சார மையம் குறித்து நீடா அம்பானி தெரிவித்ததாவது, “இந்த கலாச்சார மையம் இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கவும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்கான ஒரு இடமாகவும் இருக்கும்” என்று பேசினார்.

இந்த விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், திரைத்துறை பிரபலங்கள் ஆமிர் கான், ஆலியா பட், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்த ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவில் முதன்முறையாக உலகத்தரத்தில் ஆடம்பரமான பிராட்வே தியேட்டர் மும்பைக்கு வந்துள்ளது. இதனைச் சாத்தியப்படுத்திய எனது நெருங்கிய நண்பர் முகேஷ் அம்பானிக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீடா அம்பானி, உங்களது மற்றும் உங்கள் குழுவின் தேசப்பற்று மிக்க கண்கவர் நடன ஆட்டத்தைப் பாராட்டுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த சிறப்பான திரையரங்களில் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு பெரும் ஏக்கம் உள்ளது. விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Mukesh ambani, Rajinikanth