முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இதுகொஞ்சம் வருத்தமான விஷயம்... வீடியோ மூலம் கவலை தெரிவித்த ரஜினிகாந்த்

இதுகொஞ்சம் வருத்தமான விஷயம்... வீடியோ மூலம் கவலை தெரிவித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஃபுட் பால் ஸ்கில்லுடன் ஆடக் கூடிய வீர விளையாட்டு. சின்னச் சின்ன நாடுகள் கூட ஃபுட் பால் விளையாடி உலகத்துக்கு தெரியுது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இதனையடுத்து ஜெய்பீம் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர் ரஜினிகாந்த்தை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது ரஜினியின் வழக்கமான சந்திப்பு என்றும், இதில் அரசியல் எதுவும் இல்லை எனவும் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி விளக்கம் அளித்துள்ளார். பின்னர், மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ரஜினி, செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச்சென்றார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் கால்பந்து விளையாட்டு குறித்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  அமெரிக்காவில் உள்ள ரசிகர் ஒருவர் சென்னையில் கால்பந்து அகாடமி தொடங்கவுள்ளதாகவும் அதற்காகவே ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வீடியோவில், ''தமிழ்நாட்டில் வேர்ல்டு கிளாஸ் யூத் ஃபுட்பால் அகாடமி வருவது எனக்கு மிக சந்தோஷமான விஷயம். ஃபுட் பாலை கிங் ஆஃப் கேம்ஸ் அப்படினு சொல்வாங்க. இது ஒரு காலத்தில் இந்தியாவில் பாப்புலராக இருந்தது. பின்னர் கிரிக்கெட் வந்து அதனை டாமினேட் பண்ணிடுச்சு. இப்போ கொல்கத்தா, கேரளாவுல அதிகம் விளையாடப்பட்டுவருது. அங்க ஃபுட் பால் அவார்னஸ் இருந்துட்டு வருது. லாஸ்ட்டா நடந்த ஃபுட் பால் வேர்ல்டு கப் போட்டிகளை பார்க்காதவங்களே கிடையாது.

ஃபுட் பால் ஸ்கில்லுடன் ஆடக் கூடிய வீர விளையாட்டு. சின்னச் சின்ன நாடுகள் கூட ஃபுட் பால் விளையாடி உலகத்துக்கு தெரியுது. ஆனா இந்தியா ஃபுட் பால் விளையாட்டில் இன்னும் பேர் வாங்கல அப்படிங்கிறது வருத்தமான விஷயம். இதனால் யூத் ஃபுட் பால் அகாடமி நிச்சயம் வரவேற்கத் தக்கது. சென்னையிலிருந்து மெஸ்ஸி, ரொனால்டு ஆகியோரை இந்த அகாடமி கொடுக்கணும்'' என்று பேசினார்.

First published:

Tags: Rajinikanth