முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “ரஜினிகாந்த் எனக்கு கடவுள் மாதிரி..!” - 'பிசாசினி' ஹீரோ அதிரடி

“ரஜினிகாந்த் எனக்கு கடவுள் மாதிரி..!” - 'பிசாசினி' ஹீரோ அதிரடி

பிசாசினி

பிசாசினி

ரஜினிகாந்த் கடவுள் போன்றவர் என கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் பிசாசினி சீரியல் நடிகர் அதிரடியாக தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் பிசாசினி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் தொடரானது தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் கதையானது ராணி என்ற பெண் தன்னிடம் உள்ள அசாதாராண சக்திகளை எப்படி கண்டுபிடிக்கிறாள் என்பதையும், அதனால் அவர் வாழ்க்கையில் என்ன சம்பவங்கள் நிகழ்கிறது என்பதே இந்த தொடரின் கதை. இந்தத் தொடரில் நைரா பானர்ஜி, ஜியா சங்கர் மற்றும் ஹர்ஷ் ராஜ்புத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தத் தொடரில் நடித்துவரும் ஹர்ஷ் ராஜ்புட் யூடியூப் பக்கம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது கதாப்பாத்திரத்துக்கு தமிழ் நாட்டிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துவருவதாக தெரிவித்தார். தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் நடிக்க இதுவரை வாய்ப்பு வரவில்லை என்று தெரிவித்த அவர், தமிழில் பணியாற்ற விருப்பம் எனவும் சினிமாவுக்கு மொழி இல்லை எனவும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தனக்கு பிடித்த ஹீரோ எனவும் அவர் கடவுள் போன்றவர் என்று தெரிவித்த அவர், தனக்கு கமல்ஹாசன், ராம் சரண், ஜுனியர் என்டிஆர் உள்ளிட்டோரையும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ்