முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''நெருங்கிய நண்பரை இழந்திருக்கிறேன், ஈடு செய்ய முடியாத இழப்பு'' - ரஜினிகாந்த் வேதனை

''நெருங்கிய நண்பரை இழந்திருக்கிறேன், ஈடு செய்ய முடியாத இழப்பு'' - ரஜினிகாந்த் வேதனை

சரத் பாபு - ரஜினிகாந்த்

சரத் பாபு - ரஜினிகாந்த்

நெருங்கிய நண்பரை இழந்திருக்கிறேன் என நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் நாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார்.

சரத் பாபுவின் மறைவு குறித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது இரங்கல் பதிவில்,

சரத்பாபு

ஒரு கண்ணியக் கலைஞர்

பண்பாட்டு மதிப்பீடுகள் மிக்க பாத்திரங்களுக்குத்

தன் நடிப்பால்

தங்கமுலாம் பூசியவர்

நான்

வசனம் பாடல்கள் எழுதிய

‘அன்றுபெய்த மழையில்’ படத்தின்

நெருக்கமான பழக்கம்

பொறுக்க முடியாத

துயரம் தருகிறது

சரத்பாபுவின் புன்னகை

மரணத்தை மறக்கச் செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது இரங்கல் பதிவில், திறமயைான நடிகர் சரத்பாபுவின் மறைவு செய்தியைக் கேட்டு வேதனையடைந்தேன்.அவரது திறமையும் திரையுலகுக்கு அவர் செய்திருக்கும் தொண்டும் எப்பொழுதும் நினைவில் கொள்ளப்படும். அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் பதிவில், தென்னிந்தியத் திரையுலகின் அத்தனை மொழிகளிலும், தன் பண்பட்ட நடிப்பினால் முத்திரை பதித்த மூத்த நடிகர் திரு சரத்பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரைப் பிரிந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் இணைந்து சரத்பாபு நடித்துள்ளார். இதனையடுத்து சரத் பாபுவின் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன்.

top videos

    இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். என்று பதிவிட்டுள்ளார்.

    First published:

    Tags: MK Stalin, Rajinikanth, RN Ravi