முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மொய்தீன் பாயாக கலக்கும் ரஜினிகாந்த்.. லால்சலாம் அப்டேட்!

மொய்தீன் பாயாக கலக்கும் ரஜினிகாந்த்.. லால்சலாம் அப்டேட்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

Rajinikanth Lal salam | லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்தது

  • Last Updated :
  • Tamil Nadu, India

லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அவருடைய காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தனர்.  மேலும் அந்த திரைப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். அதன் பிறகு நெல்சன் இயக்கத்தில் அவரின் 169 படமான ஜெயிலரில் நடித்து வந்தார். அதை முடித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படக் குழுவினருடன் இணைகிறார். லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்தது.  இதைத்தொடர்ந்து தற்போது மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்குகின்றனர்.

ALSO READ | சூப்பர் ஹிட் படங்களின் இயக்குநருடன் கைகோர்க்கும் அசீம்? வெளியான தகவல்

top videos

    அதற்கான போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.  அதில் மும்பை பின்னணியில் இஸ்லாமிய தோற்றத்தில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம், சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கிறது என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் போஸ்டர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வெளியாகி உள்ளது.

    First published:

    Tags: Entertainment, Rajinikanth