முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH | ஆஸ்கர் புகழ் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு ரஜினிகாந்த் சார்பில் பாராட்டு கேடையம்!

WATCH | ஆஸ்கர் புகழ் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு ரஜினிகாந்த் சார்பில் பாராட்டு கேடையம்!

பொம்மன், பெள்ளி

பொம்மன், பெள்ளி

பக்ரைன் நாட்டு ரஜினி ரசிகர் மன்ற தலைவராக உள்ள சுரேஷ் கலாடி, பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு நினைவுப்பரிசும் வழங்கினார்.

  • Last Updated :
  • Coimbatore, India

முதுமலையில் தாயை இழந்த யானைக் குட்டிகளை பராமரித்து ஆஸ்கர் புகழ்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு, நடிகர் ரஜினிகாந்த் சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை காப்பகத்தில், யானை பராமரிப்பாளர்களாக பணியாற்றும் பொம்மன் - பெள்ளி தம்பதி குறித்த ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றது. இதனைத் தொடர்ந்து, தம்பதியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பாராட்டிய நிலையில், பக்ரைனில் இருந்து கூடலூருக்கு வந்த ரஜினி ரசிகர் சுரேஷ் கலாடி, நடிகர் ரஜினி அறிவுறுத்தலின் பேரில், தம்பதியை அழைத்து குடும்பத்தினருடன் விருந்து வைத்து மகிழ்ந்தார்.

பக்ரைன் நாட்டு ரஜினி ரசிகர் மன்ற தலைவராக உள்ள சுரேஷ் கலாடி, பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு நினைவுப்பரிசும் வழங்கினார்.

விரைவில் நடிகர் ரஜினி நேரில் அழைப்பார் என்றும் சுரேஷ் கலாடி தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Oscar Awards, Rajinikanth