முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் சாங் குறித்து வெளியான மாஸ் அப்டேட்... உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் சாங் குறித்து வெளியான மாஸ் அப்டேட்... உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்து இணையத்தில் வெளியான நிலையில் ரஜினி ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். ரஜினிகாந்த்தின் முந்தைய படமான அண்ணாத்த படத்துக்கும் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் படத்துக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் இருவரும் ஜெயிலர் படத்தில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர். இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற சிறை பாதுகாப்பு அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளதாகவும் சிறையிலிருந்து தப்பிக்கும் கைதியை மீட்பது தான் இந்தப் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

பான் இந்தியன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பேட்ட, தர்பார் படங்களுக்கு பிறகு 3வது முறையாக ரஜினிகாந்த் - அனிருத் இணைந்துள்ளதால் ஜெயிலர் பட பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெயிலர் படம் ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகிவருகிறது. நடிகர் ரஜினிகாந்த்தின் பகுதிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலானது. அதில், இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் சாங் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, ஓப்பனிங் பாடலில் ரஜினியுடன் மொத்தம் 200 டான்ஸர்கள் ஆடவிருக்கின்றனராம். அந்தப் பாடல் முழுக்க முழுக்க ஜெயிலுக்குள்ளேயே படமாக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பாடலைத்தான் படத்திலிருந்து முதல் சிங்கிளாகவும், லிரிக்கல் வீடியோவாகவும் படக்குழு வெளியிட இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Anirudh, Nelson dilipkumar, Rajinikanth