முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''ராமனாக நடித்த பிரபாஸுக்கு நன்றி''.. ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி பதிவு!

''ராமனாக நடித்த பிரபாஸுக்கு நன்றி''.. ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி பதிவு!

ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபாஸ்

ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபாஸ்

‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக நடித்திருக்கும் பிரபாஸுக்கு ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூன் 16 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் இந்தியா முழுவதும் வெளியாகிறது.  இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு திருப்பதியில் கடந்த ஜூன் 6 பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தின் புதிய ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் நான் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

ஆதிபுருஷ் பட டீசர் வெளியாகி படு சுமாரான விஎஃப்எக்ஸ் காட்சிகள் காரணமாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸுடன் இப்படத்தின் புதிய ட்ரைலர் நேற்று முந்தினம் வெளியானது. இதனால், கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதிபுருஷ் படக்குழுவிற்கும் இந்தப் படத்தில் ராமராக நடித்துள்ள பிரபாஸுக்கும் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கதில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஒட்டுமொத்த ‘ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஒரு பான் இந்திய நடிகராக இருந்துகொண்டு ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸுக்கு என்னுடைய நன்றி. இன்றைய தலைமுறைக்கு ராமாயணத்தை கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சாதனை. படம் பிரம்மாண்ட வெற்றியடைய என்னுடைய பிரார்த்தனைகள். ஹரே ராம் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Also read... கங்கனா படத்தை இயக்குகிறேனா? அயோத்தி பட இயக்குநர் விளக்கம்!

First published:

Tags: Actor prabhas, Actor Raghava lawrence