முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அயலானா? ஜிகர்தண்டாவா? கடுமையாகும் போட்டி - வெளியான மாஸ் அப்டேட்

அயலானா? ஜிகர்தண்டாவா? கடுமையாகும் போட்டி - வெளியான மாஸ் அப்டேட்

சிவகார்த்திகேயன் - ராகவா லாரன்ஸ்

சிவகார்த்திகேயன் - ராகவா லாரன்ஸ்

சிவகார்த்திகேயனின் அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மகான் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடங்கலில் நடித்துவருகின்றனர். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, திரு என்கிற திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் - திரு இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

' isDesktop="true" id="978604" youtubeid="e33FBtPwrlA" category="cinema">

இதையும் படிக்க |  விஜய்யின் தளபதி 68 இயக்குநர் இவரா ? அப்போ காமெடிக்கு கியாரண்டி

சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் அயலான் படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அயலானா, ஜிகர்தண்டாவா என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

First published:

Tags: Actor Raghava lawrence