முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழ் புத்தாண்டு வெளியீடு இல்லை.. யோகி பாபு நடித்த 'யானை முகத்தான்' ரிலீஸ் தேதியில் மாற்றம்!

தமிழ் புத்தாண்டு வெளியீடு இல்லை.. யோகி பாபு நடித்த 'யானை முகத்தான்' ரிலீஸ் தேதியில் மாற்றம்!

யானை முகத்தான்

யானை முகத்தான்

‘எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஒரு வாரம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம். வரும் 21ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகும்’ என்று படக்குழு அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை யோகிபாபு நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்த யானை முகத்தான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது யானை முகத்தான் என்ற படத்தில் நாயகனாக நடித்து இருக்கிறார். ரஜிஷா மிதிலா இயக்கத்தில் உருவாகி உள்ள யானை முகத்தான் படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர்.

Also read... நாளை தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

இந்தப் படம் நாளை தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்று, ருத்ரன், சாகுந்தலம், திருவின் குரல் உட்பட பல திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

இந்நிலையில் யானை முகத்தான் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகாது என்றும் அதை தள்ளி வைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஒரு வாரம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளோம். வரும் 21ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகும்’ என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நகைச்சுவைக்கும், அதே சமயம் சிந்திக்கும் வகையிலும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Yogibabu