மதர் இந்தியா இந்தித் திரைப்படம் 1957 இல் வெளியானது. வணிகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மதர் இந்தியா பெற்ற வெற்றியை இன்றுவரை வேறு எந்தப் படமும் பெறவில்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு மதர் இந்தியாவை இந்தியர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இயக்குனர் மெக்பூப் கான் அவுரத் என்ற படத்தை 1940 இல் எடுத்தார். கிராமத்து பெண்ணின் துணிச்சலையும், நேர்மையையும் சொல்லும் இந்தப் படத்தை சற்று மாற்றி அவர் எடுத்ததுதான் மதர் இந்தியா. சில ஆங்கிலப் புத்தகங்கள்தான் இவர் மதர் இந்தியா படத்தை எடுக்க நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் தூண்டின.
அமெரிக்க எழுத்தாளர் பியர்ல் எஸ்.பக் எழுதிய தி குட் எர்த், தி மதர் ஆகிய புத்தகங்கள் மெக்பூப் கானை ஆழமாக பாதித்தவை. இதில் தி குட் எர்த் திரைப்படமாக எடுக்கப்பட்டு, அதனையும் பார்த்திருந்தார். இந்தப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் பாதிப்பில் மதர் இந்தியா படத்தை அவர் எடுத்தார். இந்தப் படத்தை எடுக்க இன்னொரு காரணமாக அமைந்தது கேதரின் மேயோ என்ற இன்னொரு அமெரிக்க எழுத்தாளரின் மதர் இந்தியா என்ற புத்தகம். இதில் இந்தியர்களை குறிப்பாக அவர்களின் கலாச்சாரம் முதலானவற்றை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தியர்கள் மனிதர்களே இல்லை என்ற தொனி அதில் இருந்தது. தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒட்டு மொத்த இந்தியாவே அப்படித்தான் என்று எழுதியிருந்தார்.
கேதரினின் புத்தகம் ஏற்கனவே இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததால் அந்தப் புத்தகத்தின் பெயரில் படம் எடுப்பதை அறிந்தஅரசு, மெக்பூப் கானிடம் படத்தின் ஸ்கிரிப்டை சமர்ப்பிக்கும்படி கேட்டது. புத்தகத்துக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியான பிறகே படத்திற்கான வழி தடங்கலின்றி திறந்தது.
கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒருத்தி வறுமையிலும் எப்படி உழைத்து தனது குழந்தைகளை காப்பாற்றுகிறாள், சோரம் போக சந்தர்ப்பம் இருந்தும் அதனை தனது மன உறுதியால் எப்படி கடந்து உதாரண பெண்ணாக திகழ்கிறாள் என்பதை மதர் இந்தியா காட்டியது. தான் கஷ்டப்பட்டு வளர்த்த மகன் வழிதவறிச் செல்கையில் தாயான அவளே அவனை சுட்டுக் கொல்வதன் மூலம், குற்றவாளி சொந்த மகனாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் மதர் இந்தியா உரக்கச் சொன்னது.
Also read... பெரியபாளையத்து பவானி அம்மனாக ஜெயலலிதா நடித்த சக்திலீலை
இதில் டைட்டில் கதாபாத்திரத்தில் நர்கிஸ் நடித்தார். அவருடன் ராஜ் குமார், ராஜேந்திர குமார், சுனில் தத் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்தனர். 1957 இல் படம் வெளியாகி மகத்தான வரவேற்பைப் பெற்றது. இந்திய சினிமாவின் ஆல்டைம் பிளாக்பஸ்டரில் மதர் இந்தியா எப்போதும் இடம்பிடித்திருக்கும்.
இந்தப் படத்தை 1978 இல் வாணிஸ்ரீ, சிவாஜி நடிப்பில் கே.விஜயன் தமிழில் எடுத்தார். படத்தின் பெயர் புண்ணிய பூமி. வாணிஸ்ரீ யின் கணவராகவும், மகனாகவும் சிவாஜி இரண்டு வேடங்கள் ஏற்றார். சபலப்புத்தி பண்ணையாராக நம்பியார் நடித்திருந்தார். கணவன் இல்லாமல் குழந்தைகளைக் காப்பாற்றும் பெண், அவளது தியாகம் என தமிழ் சினிமா முன்பே ஏகப்பட்டமுறை உருட்டியதால் புண்ணிய பூமி தமிழ் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்கவில்லை. வாணிஸ்ரீக்கும், சிவாஜிக்கும் இன்னொருமுறை தங்களின் நடிப்பாற்றலை வெளிப்படுத்த படம் சந்தர்ப்பம் அளித்தது என்பதைத் தவிர புதிதாக ஒன்றுமில்லை.
1978 மே 12 வெளியான புண்ணிய பூமி தற்போது 45 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema