முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அதே இடத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்... தயாரிப்பாளர் விளக்கம்!

அதே இடத்தில் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்... தயாரிப்பாளர் விளக்கம்!

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

ஒரு தனிப்பட்ட நபரின் தூண்டுதலால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. அவரின் பெயரை கூற விரும்பவில்லை. அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர் என்றும் கேப்டன் மில்லர் படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷின் மில்லர் படக்குழு மத்தலம்பாறை கிராமத்திற்கு அருகில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (கேஎம்டிஆர்) பாதுகாப்பு மண்டலத்தில் சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாக  ம.தி.மு.க கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலர் ராம உதயசூரியன் உதயசூரியன் கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. படக்குழுவினர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள செங்குளம் கால்வாய் கரையின் உயரத்தை 8 அடியில் இருந்து 2 அடியாக குறைத்து, கரையில் எடுக்கப்பட்ட மண்ணை ஒரு பார்சல் போட்டு சமன் செய்தனர். கால்வாயின் குறுக்கே சட்டவிரோதமாக பாலம் கட்டியுள்ளனர்.

பழைய குற்றாலம் அருவியில் இருந்து சுமார் 15 குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாயை பொதுப்பணித் துறை அதிகாரிகள்ஆய்வு செய்த போது இந்த விதிமீறலை கண்டறிந்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் பாதுகாப்பகம் இடையக மண்டலத்தில் அனுமதியின்றி திரைப்பட யூனிட் ஒரு மெகா செட்டைக் கட்டியதாகவும் கவுன்சிலர் மேலும் கூறினார்.

அதிக ஒளியிலான பீம் லைட்கள் மற்றும் தீயை எரிப்பது மட்டுமல்லாமல், வெடிகுண்டு வெடிப்புகள் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் படமாக்கி வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது போன்ற ஒரு காட்சியின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் கசிந்தது. படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கினாலும்,  வனத் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே விரைவில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அணுக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.

தற்போது, தென்காசி பகுதியில் நடைபெறும் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்புக்கு மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகளில் அனுமதி பெறாத காரணத்தினால் படப்பிடிப்புக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,  “கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது அல்ல. 9 தனியார்களிடமிருந்து 85 ஏக்கரில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அந்த 85 ஏக்கரும் விவசாயம் செய்ய முடியாத நிலம். அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த பஞ்சாயத்து, காவல்துறை ஆகியோரிடம் அனுமதி பெற்றுள்ளோம். நாங்கள் எந்த விதி மீறலையும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Also read... இந்த குழந்தை யார் தெரியுமா? இவர்தான் இப்போ டாப் நடிகை - வைரலாகும் போட்டோ!

மேலும், முறையான அனுமதியுடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஒரு தனிப்பட்ட நபரின் தூண்டுதலால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. அவரின் பெயரை கூற விரும்பவில்லை. அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர். நல்ல முடிவு கிடைக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நிச்சயம் தொடங்கும். தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். முறையான அனுமதி பெற்று இங்கு படப்பிடிப்பு நடத்தினாலும், சிலரின் தூண்டுதலால் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெறுகின்றன என்றும் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Dhanush