அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த வாலி, வில்லன், சிட்டிசன் உள்ளிட்ட படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.
தமிழ் சினிமாவில் அஜித்தின் நண்பராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. இவர் அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு ,உள்ளிட்ட ஒன்பது திரைப்படங்களை தயாரித்தார். அதன் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். அடுத்தடுத்த படங்களை தயாரித்த எஸ்.எஸ் சக்கரவர்த்திக்கும் அவரின் நண்பர் அஜித்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்த நிலையில் தன்னுடைய மகன் ஜான் நாயகனாக நடித்த ரேனிகுண்டா என்ற திரைப்படத்தை தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் தன்னுடைய மகன் நடிப்பில் 18 வயசு படத்தை தயாரித்தார். ஆனால் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அதேபோல் சிம்பு நடிப்பில் தொடங்கிய வேட்டை மன்னன் திரைப்படமும் நிதி சிக்கல் காரணமாக பாதியிலேயே நின்றது.
இதையும் படிங்க: எங்கே போனார் கனகா? பாழடைந்த வீட்டில் நடந்தது என்ன? வைரலாகும் செய்தி!
இதனால் சினிமா தயாரிப்பில் இருந்து எஸ்.எஸ்.சக்கரவர்த்தி விலகி இருந்தார். இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பால் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவதியுற்றார்.
கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக அவருக்கு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நள்ளிரவு உயிர் பிரிந்தது. அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Tamil cinema news