முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சூர்யா சாருக்கே இது தெரியாது - சூர்யா 42 டீசர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர் - வைரலாகும் வீடியோ

சூர்யா சாருக்கே இது தெரியாது - சூர்யா 42 டீசர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர் - வைரலாகும் வீடியோ

இயக்குநர் சிவா - சூர்யா

இயக்குநர் சிவா - சூர்யா

இன்னைக்கு கேஜிஎஃப், புஷ்பா, சூர்யா 42 ஆகிய படஙகள் மும்பையில் ரூல் செய்கிறதென்றால், எதிர்பார்ப்பு இருக்கிறதென்றால் அதற்கு முழு காரணம் இயக்குநர் ராஜமௌலி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் அவரது 42வது படம் விறுவிறுப்பாக உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இந்தப் படத்தை பெரும் பொருட் செலவில் தயாரித்துவருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

மேலும் படம் இன்னும் முடிவடையாத நிலையில் வட இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் வியாபரமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் லியோ படத்தை விட அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவிவருகிறது. இதனையடுத்து சூர்யா 42 பட அப்டேட்டை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பத்து தல படம் தொடர்பாக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதில் சூர்யா 42 பட அப்டேட்டை வழங்கியிருக்கிறார்.

படம் குறித்து ஞானவேல் ராஜா தெரிவித்திருப்பதாவது, ''படத்தின் மோஷன் போஸ்டரிலேயே படத்தின் விஷன் என்ன என்பது தெரிந்துவிட்டது. இதன் மூலம் நான் சாதாரண படம் எடுக்கலனு தெரிஞ்சுக்கிட்டேன். சூர்யா சார் இதுவரை பண்ணிய படங்களின் பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம். இது சூர்யா சாருக்கே தெரியாது. தெரிஞ்சா பயப்படுவார். இதனால அதை மறச்சுட்டோம்.

இன்னைக்கு கேஜிஎஃப், புஷ்பா, சூர்யா 42 ஆகிய படங்கள் மும்பையில் ரூல் செய்கிறதென்றால், எதிர்பார்ப்பு இருக்கிறதென்றால் அதற்கு முழு காரணம் இயக்குநர் ராஜமௌலி. சூர்யா 42 படத்தின் பட்ஜெட்டுக்கு காரணம் ராஜமௌலி சார் தான். ரிசல்டுக்கு காரணம் நாங்களாக இருக்கலாம். சூர்யா 42 பட டீசர் ரெடியாயிருக்கு. மே மாதம் டீசர் வெளியாகும். படத்தின் தலைப்பு, மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு இரண்டு வாரங்களில் வெளியாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Suriya