முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’வாரிசு’ ரிசல்ட் பற்றி விஜய் என்ன சொன்னார்...? தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

’வாரிசு’ ரிசல்ட் பற்றி விஜய் என்ன சொன்னார்...? தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

தில் ராஜு - தளபதி விஜய்

தில் ராஜு - தளபதி விஜய்

வாரிசு படத்தின் ரிசல்ட் குறித்து விஜய் என்ன சொன்னார் என்பதை தயாரிப்பாளர் தில் ராஜு ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகின. இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருப்பினும் ரசிகர்களின் ஆதரவால் இரு படங்களும் வெற்றிப் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. வாரிசு படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

துணிவு படத்தின் வசூல் விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், வாரிசு தான் பொங்கல் வின்னர் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு திரையுலகில் தயாரிப்பாளராக 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதனையடுத்து ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ரசிகர் ஒருவர் வாரிசு படத்தின் ரிசல்ட் பற்றி விஜய் என்ன சொன்னார் என தில் ராஜுவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர்,  “படத்தின் ரிசல்ட் பற்றியும் அது பொங்கல் வின்னராக அமைந்தது பற்றியும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos

    தில் ராஜு தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்தை தயாரித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஷங்கருடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துவருகிறார்.

    First published:

    Tags: Actor Vijay, Varisu