முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார்களா? ஆதாரமளித்தால் 'தி கேரளா ஸ்டோரி' இயக்குநருக்கு ரூ.1 கோடி - தயாரிப்பாளர் சவால்

இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார்களா? ஆதாரமளித்தால் 'தி கேரளா ஸ்டோரி' இயக்குநருக்கு ரூ.1 கோடி - தயாரிப்பாளர் சவால்

தி கேரளா ஸ்டோரி டிரெய்லர்

தி கேரளா ஸ்டோரி டிரெய்லர்

மதச்சார்பின்மை கொண்ட இந்தியாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக தி கேரளா ஸ்டோரி படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளதாக பிரபல தயாரிப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சாதி, மத ரீதியான கருத்துக்களை கொண்டிருக்கும் படங்கள் சர்ச்சையை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் தமிழில் சமீபத்தில் ஆஹா ஓடிடியில் வெளியான புர்கா படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாகவும் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் மலையாளத்தில் உருவாகியுள்ள தி கேரள ஸ்டோரி என்ற படம் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படத்தில் கேரளாவை சேர்ந்த அப்பாவி இந்து பெண்களை மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றி ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதாகவும் கேரளாவை சேர்ந்த பெண்கள் பலர் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தில் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க |  இயக்குநர் மனோபாலா மறைவுக்கு காரணம் இதுதான்... மகன் ஹரீஷ் வெளியிட்ட தகவல்..!

இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் நாடு முழுவதிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்த வகையில் ஆண்டி இந்தியன் பட தயாரிப்பாளரும், இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள உயிர் தமிழுக்கு பட இயக்குநருமான ஆதம் பாவா இந்தப் படத்துக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மதச்சார்பின்மை கொண்ட இந்தியாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரெய்லர் அமைந்திருக்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டும் சில அமைப்புகள் பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இந்த 'தி கேரள ஸ்டோரி'.

டிரெய்லரில் கூறப்பட்டுள்ளது போல கேரளாவைச் சேர்ந்த 32,000 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐ எஸ்  ISIS குழுவில் சேர்ந்ததற்கான ஆதாரத்தை படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கொடுத்தால் அவருக்கு ரூ 1 கோடி பரிசு அளிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Trailer