செய்தி வாசிப்பாளராக மீடியாவில் அடியெடுத்து வைத்து சின்னத்திரை தொடரில் நடிகையாக களமிறங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிக்கொண்டிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். தற்போது அவரது நடிப்பில் ருத்ரன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தொகுப்பாளராக இருந்தபோது இயக்குநர் கௌதம் மேனனை பேட்டி எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவரது பதிவில், ''இந்த வீடியோ பழைய நினைவுகளை நினைவுப்படுத்துகிறது. எனக்கு ரொம்ப ஸ்பெஷல். யார் இதனை வெளியிட்டார்களோ அவர்களுக்கு நன்றி. எனது சுவாரசியமான பயணத்தை உணர முடிகிறது.
View this post on Instagram
உங்கள் உடலையும் உங்கள் தோற்றத்தையும் வைத்து சிலர் உங்களை காயப்படுத்துவார்கள். நீங்கள் யார் என்பதையும் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதையும் மற்றவர்களை பேச, முடிவு செய்ய அனுமதிக்காதீர்கள்.
இதுதான் அழகு என்ற எந்த வரையறையும் இல்லை. ஸ்கின் கேர், வாழ்க்கை முறை என நடிகர்கள் நிறைய செலவிடுவார்கள். ஆனால் சாதாரண கல்லூரி மாணவியால் அதெல்லாம் செய்ய முடியாது. அதனால் உங்களிடம் நல்ல தோற்றமும், உடல்வாகும், தோல் நிறமும் இல்லையென்றால் பரவாயில்லை. இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை வைத்து முடிவுக்கு வராதீர்கள்.
இன்று நான் தயாராக எனக்கு 10 பேர் கொண்ட குழு இருக்கிறார்கள். அழகுக்கு இதுதான் வரையறை என்று எதுவும் இல்லை. நிச்சயம் அது இலக்கு இல்லை. அது ஒரு வேலை. அதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்.
காசு வந்தா காக்கா கூட கலராகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். காசு தானா தேடி வராது. நீங்கள் உலகத்துடன் சண்டையிட்டு விரும்புவதை பெற வேண்டும். உங்களுக்கு அது கிடைக்கும்போது அதனை வைத்து நீங்கள் செய்யப்போகிறீர்கள் என முடிவெடுங்கள். கலர் ஆகனும் என்று எந்த அவசியமும் இல்லை.
ராஜவேல் ஐ லவ் யூ. நீ அப்போது எப்படி பார்த்தாயோ, அப்படியே தான் இப்பொழுதும் பார்க்கிறாய் நன்றி. நீங்கள் இதுபோன்ற நபரை கண்டுபிடித்தால் விட்டுவிடாதீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Priya Bhavani Shankar