கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியான நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துவருகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதிலிரும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ''ராகுல் காந்தி ஜி குறிப்பிடத்தகுந்த வெற்றிக்காக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காந்திஜி போல நீங்களும் உங்கள் வழியில் நடந்து மக்களின் இதயத்துக்குள் நுழைந்துள்ளீர்கள். மேலும் அவரைப் போல நீங்கள் அன்பும் மனிதத்தன்மையும் கொண்டு உங்கள் வழியில் உலகின் சக்தியை அசைத்திருக்கிறீர்கள். படபடப்பு இல்லா நெஞ்சத்துடன் கூடிய, உங்கள் நம்பத் தகுந்த அனுகுமுறை மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க உதவியிருக்கிறது.
பிரிவினைவாதத்தை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், உங்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களும் ஒற்றுமையாக பதிலடி கொடுத்தார்கள். வெற்றிக்காக மட்டுமில்லை, வெற்றியடைந்த விதத்துக்காகவும் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா முதல்வர் யார்? சித்தராமையாவா? சிவகுமாரா? மேலிடம் எடுக்கப்போகும் அந்த முடிவு!
கர்நாடகாத் தேர்தல் முடிவு குறித்த நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டர் பதிவில், ‘வெறுப்பையும் மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி. பேரரசர் நிர்வாணமாக நிற்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.