முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: பிரபு தேவா குறித்து எமோஷனலாக பேசிய 2வது மனைவி - வைரலாகும் வீடியோ

Video: பிரபு தேவா குறித்து எமோஷனலாக பேசிய 2வது மனைவி - வைரலாகும் வீடியோ

பிரபு தேவா

பிரபு தேவா

பிரபு தேவா குறித்து அவரது இரண்டாவது மனைவி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறன் கொண்டவர் பிரபுதேவா. இவர் ராமலதா என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 3 மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் இருவரது பிரிவுக்கும் காரணமாக அமைந்தது. பின்னர் நயன்தாராவுடனான காதலும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

இந்த நிலையில் டாக்டர் ஹிமானி என்பவரை நடிகர் பிரபு தேவா 2வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் திருமணம் குறித்து நடிகர் பிரபு தேவா வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.

இதையும் படிக்க |  39 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த ரஜினியின் படம்
 
View this post on Instagram

 

A post shared by Prabhu Deva Fans (@prabhu_deva_fans)இந்த நிலையில் பிரபு தேவாவின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் அவரது 2வது மனைவி ஹிமானி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது . அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, ''ஹலோ பிரபு, நாம் 3 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறோம். இந்த மறக்க முடியாத பயணத்தில் உங்களுடன் இருந்தது மகிழ்ச்சி. உங்களிடமிருந்து நிறைய விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.

top videos

    நீங்கள் மிக ஒழுக்கமானவர். கடினமான உழைப்பாளி. மிகவும் மகிழ்ச்சியான கொண்டாட்டமான மனிதர். உங்களின் நகைச்சுவை உணர்வு சிறப்பானது. உங்களை திருமணம் செய்துகொண்டவகையில் நான் ஆசிர்வதிக்கப்படவளாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Prabhu Deva