முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெறித்தனம்! ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாட்டுக்கு நடனமாடிய பிரபு தேவா - வீடியோ பகிர்ந்து ராம் சரண் நெகிழ்ச்சி

வெறித்தனம்! ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாட்டுக்கு நடனமாடிய பிரபு தேவா - வீடியோ பகிர்ந்து ராம் சரண் நெகிழ்ச்சி

பிரபு தேவா - ராம் சரண்

பிரபு தேவா - ராம் சரண்

ஆர்சி15 படத்துக்கு தமன் இசையமைக்கும் நிலையில் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபு தேவா நடனம் இயக்குநராக பணியாற்றுகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்ஆர்ஆர் படத்தின் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இது நாட்டுக்கே பெருமை சேர்த்திருப்பதாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதனையடுத்து இந்தியா திரும்பிய அப்படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம் சரணுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கும் நிலையில் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபு தேவா நடனம் இயக்குநராக பணியாற்றுகிறார். இந்த நிலையில் தனது நடனக் குழுவினருடன் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பிரபு தேவா பகிர்ந்துள்ளார்.

அதற்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக ராம் சரண், இதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது . இன்ப அதிர்ச்சி கொடுத்ததற்கு நன்றி கிராண்ட் மாஸ்டர் பிரபு தேவா. மீண்டும் படப்பிடிப்பில் இணைந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்சி 15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஷங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

First published:

Tags: Ram Charan