லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் இன்னசென்ட். மலையாளத்தில் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் இன்னெசன்ட் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். காமெடி, குணச்சித்திர வேடம் என அவர் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசு விருதுகளை அவர் வென்றிருக்கிறார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இன்னசென்ட் பதவி வகித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சகிச்சை பெற்று குணமடைந்தார். பின்னர் புற்றுநோய் பாதிக்கப்பட்டபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஸ்மைல் இன் தி கேன்சர் வார்டு என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மகள் என்ற படத்தில் கடைசியாக இன்னெசன்ட் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையும் படிக்க - ரகு இப்போது இருந்திருந்தால்... - நினைவுநாளில் ரகுவரன் குறித்து ரோகினி உருக்கம்
இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer, Malayalam actor