முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செத்த மனுஷனுக்கு ஓடுற.... பொன்னியின் செல்வன் 2 படத்தை பங்கமாய் கலாய்த்த காமெடி நடிகர்

செத்த மனுஷனுக்கு ஓடுற.... பொன்னியின் செல்வன் 2 படத்தை பங்கமாய் கலாய்த்த காமெடி நடிகர்

விக்ரம் - ஜெயம் ரவி - திரிஷா

விக்ரம் - ஜெயம் ரவி - திரிஷா

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்தை பிரபல நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலாய்த்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. குறிப்பாக படத்தில் ஆதித்த கரிகாலனின் கதாப்பாத்திரத்துக்கு நடக்கும் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இந்தப் படம் இதுவரை ரூ.200 கோடி அளவுக்கு வசூலித்ததாக படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதையை இளங்கோ குமாரவேல், மணிரத்னம், ஜெயமோகன் இணைந்து எழுதியிருந்தனர். ராஜ ராஜ சோழன் அரியனை ஏறிய வரலாற்றை எழுத்தாளர் கல்கி புனைவு கலந்து எழுதியிருந்தார். குறிப்பாக நந்தினி உள்ளிட்ட நாவலுக்காக சேர்க்கப்பட்டன.

இதையும் படிக்க | Video: ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தபோதே மேடையில் ஏறிய புனே போலீஸ்.. நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி.. நடந்தது என்ன?




 




View this post on Instagram





 

A post shared by Shiva Shah Ra (@shivashahra_official)



இந்த நிலையில் 5 பாகங்கள் கொண்ட நாவலை 2 பாகங்கள் கொண்ட படமாக மாற்ற, மணிரத்னம் சில மாற்றங்களை செய்திருக்கிறார். இந்த நிலையில் படத்துக்கு பாராட்டுகள் குவிந்துவரும் அதே வேளையில் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் முடிவும் சேந்தன் அமுதன் கதாப்பாத்திரம் கையாளப்பட்ட விதமும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. வரலாற்றை திரித்துவிட்டதாக பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் கோமாளி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் ஷாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் குறித்த விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார். அவரது பதிவில், சென்னை எம்ஜிஆர் சமாதியில் காது வைத்து கேட்டால் தலைவரின் வாட்ச் ஓடும் சத்தம் கேட்கும் என்று எவனோ ஒருவன் கிளப்பி விட்ட புரளிக்கு இன்று வரை காது வைத்து கேட்டு கொண்டு இருக்கிறார்கள்.

top videos

    பொன்னியின் செல்வனும் அப்படித்தான். எல்லோரும் போறாங்களேனு தியேட்டர்க்கு போய் புண்ணாகி வராங்க. படத்தில் மட்டுமே சத்தம். ஆடியன்ஸ் எம்ஜிஆர் சமாதி போல மயான அமைதியில், போதும் நிறுத்திக்கலாம். செத்த மனுஷனுக்கு ஓடுற ஈசிஜி கிராஃப் மாதிரி ஒரே நேர்கோட்டுல இருந்தது பொன்னியின் செல்வன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Ponniyin selvan