முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நிஜத்தில் சட்டையைக் கழட்டி உடம்பைக் காட்டுவாங்களா? - தென்னிந்திய படங்களை விமர்சித்த வில்லன் நடிகர்

நிஜத்தில் சட்டையைக் கழட்டி உடம்பைக் காட்டுவாங்களா? - தென்னிந்திய படங்களை விமர்சித்த வில்லன் நடிகர்

ராகுல் தேவ்

ராகுல் தேவ்

நான் படித்த குடும்ப பின்னணியில் இருந்து வருபவன். பிரம்மாண்ட படங்களில் நடிக்கும்போது எனது மூளையை வீட்டில் வைத்துவிட்டுதான் வரவேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜயகாந்தின் நரசிம்மா, ஜெயம் ரவியின் மழை, சூர்யாவின் ஆதவன், அஜித்தின் வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் ராகுல் தேவ் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தென்னிந்திய படங்களை விமர்சித்துள்ளார். அதில், தென்னிந்திய படங்களில் நிஜ வாழ்க்கைக்கு துளியும் சம்பந்தமில்லாத சண்டைக்காட்சிகளை காண்பிக்கிறார்கள். இது வேடிக்கையாக இருக்கிறது. ஒரே போன்ற கதையாக இருந்தாலும் அதனை பார்வையாளர்களை கவரும் வகையில் சொல்வதால் அதற்கு வரவேற்பு இருக்கிறது.

நான் படித்த குடும்ப பின்னணியில் இருந்து வருபவன். பிரம்மாண்ட படங்களில் நடிக்கும்போது எனது மூளையை வீட்டில் வைத்துவிட்டுதான் வரவேண்டும். நிஜ வாழ்க்கையில் 2 பேர் சண்டையிட்டார்கள் என்றால் அவர்கள் தங்கள் சட்டையை கழட்டி உடலைக் காட்டுவார்களா? பெரும்பாலானோர் இதனை விரும்புகிறார்கள். இங்கு எது சரி என விமர்சிக்க நாம் யார் இது இயக்குநரின் திறமை சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Movies, Tamil movies