முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் சோகம்...!

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் சோகம்...!

அல்லு ரமேஷ்

அல்லு ரமேஷ்

பிரபல நடிகர் அல்லு ரமேஷ் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் அல்லு ரமேஷ். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சிருஜல்லு படத்தின் மூலம் அறிமுகமான அவர் தொலு பொம்மலதா, மதுரை வைன்ஸ், வீதி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அல்லு ரமேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 52. அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

இதையும் படிக்க | வீடியோ கால்லயாச்சும் குழந்தையைக் காட்டு திவ்யா - கண்ணீர் விட்ட அர்னாவ்

top videos

    இந்த நிலையில் அல்லு ரமேஷ் மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தெலுங்கு இயக்குநர் ஆனந்த் ரவி,  “ஆரம்பத்தில் இருந்து எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் குரல் எனக்கு இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்கள் மறைவை ஏற்க முடியவில்லை ரமேஷ். என்னைப் போல நிறைய இதயங்களை கவர்ந்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Actor