முகப்பு /செய்தி /entertainment / “பொன்னியின் செல்வன் எல்லாம் தூசு மாதிரி...” சுகாசினியிடம் மணிரத்னம் சொன்ன விஷயம் இதுதான்..!

“பொன்னியின் செல்வன் எல்லாம் தூசு மாதிரி...” சுகாசினியிடம் மணிரத்னம் சொன்ன விஷயம் இதுதான்..!

பொன்னியின் செல்வம் இரண்டாம் பாகத்தின் இசை வெளியிட்டு விழாவில் மணி ரத்தினர் மற்றும் சுஹாசினி

பொன்னியின் செல்வம் இரண்டாம் பாகத்தின் இசை வெளியிட்டு விழாவில் மணி ரத்தினர் மற்றும் சுஹாசினி

PonniyinSelvan2 Audio Launch | நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Chennai, India

பொன்னியின் செல்வம் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் ஏரளாமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நடிகைகள் ஐஸ்வர்யா ராய், குஷ்பு மற்றும் த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ராய், தமிழில் ரசிகர்களுக்கு நன்றி கூறினார்.

தொடர்ந்து பேசிய நடிகை த்ரிஷா, பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் ஆக்‌ஷன், டிராமா என அனைத்தும் டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்றார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாகுபலி உடன் ஒப்பிடக்கூடாது என்று நடிகை குஷ்பு பேசினார். மேலும் ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது.

இசை வெளியீட்டு விழாவுக்கு தங்கலான் பட லுக்கில் வருகை தந்தார் நடிகர் விக்ரம். மேலும் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மணி ரத்னத்தின் மனைவி சுகாசினி,  “எப்படி இவ்வளவு பெரிய படத்தை கஷ்டப்பட்டு எடுத்துட்டீங்கன்னு கேட்டேன். அதற்கு மணிரத்னம், இதெல்லாம் எனக்கு தூசு என சொன்னார். அவரோட படத்திலே எனக்கு பிடிச்சது நாயகன். அதுக்கு அப்புறம் எனக்கு பிடிச்சது பொன்னியின் செல்வன் தான்” எனப் பேசினார்.

First published:

Tags: Ponniyin selvan