முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் படத்தை நாம் வரவேற்க வேண்டும் - ஹெச்.ராஜா

பொன்னியின் செல்வன் படத்தை நாம் வரவேற்க வேண்டும் - ஹெச்.ராஜா

பொன்னியின் செல்வன் - ஹெச்.ராஜா

பொன்னியின் செல்வன் - ஹெச்.ராஜா

Ponniyin selvan Movie | பொன்னியின் செல்வன் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் எல்லாவற்றையும் நாம் வரவேற்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக வெளியாகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலை அள்ளியது. இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “பொன்னியின் செல்வன் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் எல்லாவற்றையும் நாம் வரவேற்க வேண்டும். சோழப் பேரரசு பெரிய பேரரசு. பெரும் வளம் கொண்ட பேரரசு. படித்தால் தான் மற்ற இடங்களில் தமிழன் மதிப்பு உயரும். மேலும் மற்ற இடங்களுக்கு தமிழை கொண்டு செல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க; பொன்னியின் செல்வனில் சிறுவயது குந்தவை, இந்த சீரியல் நடிகையின் மகளா?- வைரலாகும் போட்டோஸ்

நாம் நம்முடைய ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு முன்பாக இருந்த ஒரு காலத்தை இந்த படம் காட்சிப் படுத்தியிருக்கிறது என்ற அவர், “படம் எளிமையாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்த படத்தை நம்மை ஆர்வத்தோடு பார்க்க வைத்ததற்கு நம் கலாச்சாரமும் பழமையும் தான் காரணம்” என்றார்.

top videos
    First published:

    Tags: H.raja, Ponniyin selvan