தமிழில் இளையராஜா இசையில் அவதாரம் படத்தில் இடம்பெற்ற தென்றல் வந்து தீண்டும்போது பாடல் தெலுங்கில் நானியின் எவடே சுப்பிரமணியம் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் ரக்ஷிதா சுரேஷ்.
இதனையடுத்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பத்து தல படத்தில் காலத்துக்கு நீ வேணும், கோப்ரா படத்தில் ஏல இளஞ்சிங்கமே, பொன்னியின் செல்வன் 1 படத்தில் சொல் உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
🙏🏼🧿 pic.twitter.com/NU3gUBtqjL
— Rakshita Suresh (@RakshitaaSuresh) May 7, 2023
இந்த நிலையில் விபத்து ஒன்றில் சிக்கியிருப்பதாக பாடகி ரக்ஷிதா சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், இன்று காலை மலேசியா ஏர்போர்ட் நோக்கி நான் பயணித்த கார் சாலையின் டிவைடரில் மோதி சாலையின் மறுபக்கம் விழுந்தது. என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் கண்முன் வந்தது.
ஏர் பேக்கிற்கு நன்றி. அது இல்லையெனில் நிலைமை மோசமாகியிருக்கும். அதனை நினைத்து இப்பொழுதும் உடல் நடுங்குகிறது. இருப்பினும் நானும் டிரைவரும் என்னுடன் பயணித்தவரும் சிறிதான காயங்களுடன் தப்பித்தோம். உயிரோடு இருப்பது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident