முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குழந்தை பிறந்துள்ளதை அறிவித்த பொன்னியின் செல்வன் நடிகர் - குவியும் வாழ்த்து

குழந்தை பிறந்துள்ளதை அறிவித்த பொன்னியின் செல்வன் நடிகர் - குவியும் வாழ்த்து

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் பட நடிகர் தனக்கு குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் சேந்தன் அமுதன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் அஸ்வின் காகுமனு. படத்தில் சேந்தன் அமுதன் எவ்வளவு முக்கியமான கதாப்பாத்திரம் என்பது பொன்னியின் செல்வன் நாவல் படித்தவர்களுக்கு நன்றாக தெரியும்.




 




View this post on Instagram





 

A post shared by Ashwin Kakumanu (@ashwinkakumanu)



இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், ஏப்ரல் 2 ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் அம்மாவும் நலமாக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்த தெரிவித்துவருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Ponniyin selvan