முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதல் நாளில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் பொன்னியின் செல்வன் படக்குழு - எந்தெந்த தியேட்டர்கள் தெரியுமா?

முதல் நாளில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் பொன்னியின் செல்வன் படக்குழு - எந்தெந்த தியேட்டர்கள் தெரியுமா?

பொன்னியின் செல்வன் படக்குழு

பொன்னியின் செல்வன் படக்குழு

பொன்னியின் செல்வன் படக்குழு முதல் நாள் படம் பார்க்கும் திரையரங்குகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ரசிகர்கள் இந்தப் படத்தை தமிழர்களின் பெருமையாக கொண்டாடினர். இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை வெளியாகிறது.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியா ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முதல் பாகத்தைப் போலவே இதிலும் நடிகர் கமல்ஹாசன் படத்தின் துவக்கத்தில் கதையை விவரிக்கிறார்.

இதையும் படிக்க | என்கிட்ட ரெண்டு கதை இருக்கு... விஜய்யை இயக்கப்போகும் விஷால்? - வைரலாகும் தகவல்

top videos

    இந்த நிலையில் முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினரும் படம் பார்க்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் படி நடிகர் ஜெயம் ரவி சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் நாளை காலை 9 மணி காட்சியை ரசிகர்களுடன் பார்க்கிறார். மேலும் நடிகர் கார்த்தி நாளை காலை 9 மணி காட்சியை சென்னை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்க்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய் சென்னை சத்யம் திரையரங்கில் மாலை அல்லது இரவு காட்சியைப் பார்க்கவிருப்பதாக கூறப்படுகிறது.

    First published:

    Tags: Ponniyin selvan