முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்.. திருச்சியில் வெறிச்சோடிய தியேட்டர்கள்.!

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்.. திருச்சியில் வெறிச்சோடிய தியேட்டர்கள்.!

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

திருச்சியில் உள்ள திரையரங்குகளில் இன்று படம் வெளியான நிலையில், ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் - 2 திரைப்படம் வெளியானது இன்று வெளியான நிலையில் திருச்சியில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாததால் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட  பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சோழ - பாண்டிய மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதன் காரணமாக இரண்டாம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிடைத்தது. மேலும், படக்குழுவினரும் ஒவ்வொரு மாவட்டமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். பிற மொழிகளிலும் புரமோஷன் செய்யும் பணிகள் நடைபெற்றன.

வழக்கமாக அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும், ஆனால் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அரசு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்காததால் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. ஒரு சில திரையரங்குகளில் தற்பொழுது 11 மணி அளவில் திரையிடப்பட்டுள்ளது.

Also read...  பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு கூட்டம் இல்லை..?! கோவையில் நிறையாத தியேட்டர்கள்!

திருச்சியில் உள்ள திரையரங்குகளில் இன்று படம் வெளியான நிலையில், ரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோன்று முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு மேளதாளங்கள் முழங்க மிகுந்த ஆரவாரத்துடன் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் நிகழ்வுகள் நடைபெறும். ஆனால் எவ்வித ஆரவாரம் இன்றி திருச்சியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெறுமா? வரும் நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்குமா என போகப் போகதான் தெரியும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Ponniyin selvan