முகப்பு /செய்தி /entertainment / பொன்னியின் செல்வன் 2 எதிர்பார்த்தபடி சிறப்பாக இருக்கு... கோவை ரசிகர்கள்...!

பொன்னியின் செல்வன் 2 எதிர்பார்த்தபடி சிறப்பாக இருக்கு... கோவை ரசிகர்கள்...!

பொன்னியின் செல்வன் - 2 கோவை

பொன்னியின் செல்வன் - 2 கோவை

Coimbatore | பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் எதிர்பார்த்தபடி சிறப்பாக வந்திருப்பதாக படத்தை பார்த்த பின் ரசிகர்கள் தெரிவித்தனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்று வெளியிடப்பட்டது. காலையில் முதல் காட்சிகளில்  திரையரங்குகளில் குறைவான நபர்களே திரையரங்கிற்கு வந்திருந்தனர்.

முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் சிறப்பாக இருந்ததாகவும், நடிகர்களின்  நடிப்பும்  சிறப்பாக இருந்ததாகவும் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தெரிவித்தனர். முதல் பாகம் நடிகர் கார்த்தியை வைத்து நகர்த்தி இருப்பதை போல , இரண்டாம் பாகம் நடிகர் விக்ரமையும், ஐஸ்வர்யாவையும் வைத்து நகர்த்தி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பதாகவும், புத்தகம் படித்தவர்களுக்கு சில பாகங்கள் சினிமாவில் இல்லாமல் இருப்பது சின்ன ஏமாற்றம் எனவும், புத்தகம் படிக்காமல் படத்தை பார்ப்பவர்களுக்கு படம் சிறப்பாக இருக்கு எனவும் புத்தகத்தை படித்தவர்கள் தெரிவித்தனர்.

Also see... இணையத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2.. அதிர்ச்சியில் படக்குழுவினர்!

நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Coimbatore, Ponniyin selvan