பொன்னியின் செல்வன் கதையை என்னுடைய கல்லூரி காலத்தில் 5 முறை படித்துள்ளேன் என அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், குஷ்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துகொண்டு பேசினர். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “பொன்னியின் செல்வன் கதையை என்னுடைய கல்லூரி காலத்தில் 5 முறை படித்துள்ளேன். படம் வெளியாகி பார்த்தபோது பிரமித்து விட்டேன். மணியால் இப்படி கூட படம் எடுக்க முடியுமா என நினைத்து அவருக்கு வாழ்த்துகள் சொன்னேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரை முருகன், “எனக்கு வந்தியத்தேவன் கேரக்டர் மேல் பிரியம் அதிகம். காரணம் எனது தொகுதியில் இருக்கும் திருவலம் பகுதிதான் வந்தியத்தேவன் ஊரு. அதனால் எனக்கு பிடிக்கும். இங்கே கமல் வந்திருக்கிறார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கும் மட்டுமல்ல என்றைக்கும் எவரும் இல்லை” எனவும் புகழ்ந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Duraimurugan, Ponniyin selvan