முகப்பு /செய்தி /entertainment / பல அதிரடி திருப்பங்களுடன் வெளியானது பொன்னியின் செல்வன் - 2 டிரெய்லர்..!

பல அதிரடி திருப்பங்களுடன் வெளியானது பொன்னியின் செல்வன் - 2 டிரெய்லர்..!

செல்வன்  இரண்டாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு

செல்வன் இரண்டாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு

Ponniyin Selvan 2 Trailer | பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி,பார்த்திபன், விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.400 கோடி வசூலை கடந்தது. இந்த நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் நடிகர் கமல், சிம்பு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பொன்னியின் செல்வன் -2 ஆம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியானது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் அருள்மொழிவர்மனும் வந்தியத்தேவனும் கடலில் முழ்க அவர்களை ஊமைராணி காப்பாற்ற வரும் வகையில் முடிந்திருந்தது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லரில் தஞ்சைக்கு மீண்டும் திரும்பும் ஆதித்த கரிகாலன், நந்தினியை மீண்டும் சந்திப்பது உள்பட  படத்தின் முக்கியத் திருப்பங்கள் அனைத்தும் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. 3.34 நிமிடங்கள் ஓடும் இந்த டிரெய்லரில் ஏ.ஆர்.ரகுமான் இசை மற்றும் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தை மேலும் பிரமாண்டமாக வந்துள்ளதை காட்டுகிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

First published:

Tags: Ponniyin selvan