முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தபோதே மேடையில் ஏறிய புனே போலீஸ்.. நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி.. நடந்தது என்ன?

Video: ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தபோதே மேடையில் ஏறிய புனே போலீஸ்.. நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி.. நடந்தது என்ன?

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை புனே காவல்துறையினர் பாதியில் நிறுத்திய சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1992ல் வெளியான ரோஜாவில் துவங்கி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் இசை ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ரஹ்மான். இந்த ஆண்டு ரஹ்மான் இசையில் வெளியான பத்து தல, பொன்னியின் செல்வன் 2 பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

மேலும் இந்த ஆண்டு ரஹ்மான் இசையில் ரஜினிகாந்த்தின் லால் சலாம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன், சிவகார்த்திகேயனின் அயலான், பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இதையும் படிக்க | பட்டுக்குட்டி வந்துட்டா... குழந்தை பிறந்ததை அறிவித்த சீரியல் நடிகர் நவீன்!

இந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது ரஹ்மான் மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே காவல்துறையினர் மேடையேறி நிகழ்ச்சியை நிறுத்த சொல்லியிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் ரஹ்மானை அவமதித்துவிட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி இசை நிகழ்ச்சியை 10 மணியுடன் முடித்துக்கொள்ள காவல்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ரசிகர்கள் அளித்த உற்சாகத்தின் காரணமாக ரஹ்மான் தொடர்ந்து பாடியதாகவும் இதன் காரணமாகவே காவல்துறையினர் நேரத்தை சுட்டிக்காட்டி நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பாதியில் முடிந்ததால் ரசிகர்கள் சோகத்துடன் வீடு திரும்பினர்.

top videos
    First published:

    Tags: AR Rahman