முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஃபர்ஹானா படத்துக்கு எதிர்ப்பு - ஆளுநர் மாளிகை விருது நிகழ்வை புறக்கணித்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

ஃபர்ஹானா படத்துக்கு எதிர்ப்பு - ஆளுநர் மாளிகை விருது நிகழ்வை புறக்கணித்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தினம் விருது வழங்கும் விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொள்ளவில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமியராக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய பெண்ணான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக மத நம்பிக்கைகளைக் கடந்து வேலைக்கு செல்லும் விதமாக படத்தில் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், இஸ்லாமிய இயக்கத்தினர் பலர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் இஸ்லாமிய இயக்கத்தினர்களால் புகாரளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இத்திரைப்படமானது மே 12-ம் தேதி திரையரங்களில் வெளியானது. இதனால், இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலை சிவ சைலம் தெருவில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |  ''ஆமா நீ கூப்பிட்டு வச்சு பண்ண வேலைக்கு...'' - லோகேஷை கலாய்த்த விஜய் - தரமான சம்பவம்

சுழற்சி முறையில் நான்கு காவலர்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டில் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தினம் விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் இடம் பெற்று இருந்தது.

அந்த நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷின் தாய் நாகமணிக்கு விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொள்ளவில்லை என்பதும் தனது படத்திற்கு ஏற்பட்ட நிலை குறித்த ஆதங்கத்தினால் அவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

First published:

Tags: Aishwarya rajesh