முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நண்பா.. நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி! மறைந்துவிட்டாயா? - உருக்கமாக பதிவிட்ட வைரமுத்து!

நண்பா.. நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி! மறைந்துவிட்டாயா? - உருக்கமாக பதிவிட்ட வைரமுத்து!

வைரமுத்து

வைரமுத்து

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மறைவிற்கு கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அஜித்தின் நண்பராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. இவர் அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன், ரெட் உள்ளிட்ட ஒன்பது திரைப்படங்களை தயாரித்தார். அதன் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார்.

தன்னுடைய மகன் ஜான் நாயகனாக நடித்த ரேணிகுண்டா என்ற திரைப்படத்தை தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் தன்னுடைய மகன் நடிப்பில் 18 வயசு படத்தை தயாரித்தார். ஆனால் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.

 இதனால் சினிமா தயாரிப்பில் இருந்து எஸ்.எஸ்.சக்கரவர்த்தி விலகி இருந்தார். இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Also read... நாத்திகத்துக்கும் இடம் கொடுத்த ஆன்மிகப் படம்.. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சினிமாவா? ’அம்மன் அருள்’ செய்த சம்பவம்!

இந்நிலையில் அண்மையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக  கடுமையாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் இவர் உயிரிழந்துள்ளார்.

இவரது உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நண்பா! நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி! மறைந்துவிட்டாயா? அஜித்தை வைத்து நீ தயாரித்த வாலி, முகவரி, சிட்டிசன் ரெட், வில்லன், ஆஞ்சநேயா வரலாறு ஆகிய 7படங்களுக்கும் என்னையே எழுத வைத்தாயே தமிழ்க் காதலா! காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா? கலங்குகிறேன்; கலையுலகம் உன் பேர்சொல்லும் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Poet vairamuththu