முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி - சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனையில் அனுமதி!

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி - சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனையில் அனுமதி!

பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா என்ற பாடலை பாடியதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அதை தொடர்ந்து ஏராளமான ஹிட்பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களின் இசையில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் தொடர்ந்து பாடி வந்தார். அதேபோல் வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றம் பாடல்களைப் பாடுவார். அந்த வகையில் லண்டனில் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார். அதில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிப்பட்டுள்ளது. இதையடுத்து சுயநினைவை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


First published:

Tags: Entertainment