விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து, இயக்கி, இசையமைத்து, எடிட் செய்துள்ள பிச்சைக்காரன் 2 படம் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் ஆண்டனி சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார்.
பின்பு நியூஸ்18 தொலைக்காட்சிக்கு விஜய் ஆண்டனி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும் என ஓராண்டுக்கு முன்பே நான் கூறினேன். அது இப்போது நடந்திருப்பது சந்தோஷம். ஒரு கிரியேட்டராக நான் இந்தப் படத்தை எடுக்கவில்லை. மக்களோடு இருந்துதான் இந்த படத்தை எடுத்தேன்.
இந்த படத்தை இயக்கியவனாக, பலமுறை எடிட் செய்தவனாக இந்த படத்தை பலமுறை பார்த்த பிறகும் எனக்கு கண்ணீர் வருகிறது. முதன்முறையாக மக்கள் பார்க்கும் பொழுது கண்ணீர் வராதா என்ன? நான் நினைத்தது நடந்துள்ளது.
இதையும் படிக்க | பிளாஸ்டிக் சர்ஜரியால் என் முகம் மாறியதா? - சர்ச்சைக்கு கீர்த்தி ஷெட்டி விளக்கம்
View this post on Instagram
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தால் கேவலமாக இருக்கும். ஏனென்றால், அந்த அம்மா செண்டிமெண்ட் மீண்டும் காட்டுவது போல இருக்கும். காதலியை திருமணம் செய்துவிட்டேன். இதெல்லாம் நடந்து விட்டது. இதனால் புதுக்கதையை எடுக்க முடிவெடுத்தேன்.
பிச்சைக்காரன்-3 திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும். உடனடியாக அந்த திரைப்படத்தை எடுத்துவிட்டால் அதற்கான முழு எதிர்பார்ப்பு இருக்காது. பிச்சைக்காரன் 3 படத்துடைய கதையை இப்போதே கூறுகிறேன். அது முதல் பாகத்தின் தொடர்ச்சியோ, இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியோ அல்ல. அது ஒரு புதிய கதை. அந்த படத்தை நான் இயக்குவேன் என்பது இப்போது தெரியாது என்றார்.
பணம் மதிப்பிழப்பு குறித்த கேள்விக்கு, இது எதர்ச்சையாக நடக்கவில்லை. நான் பிளான் பண்ணி வைத்தேன். முதல் பாகத்திலேயே இதைத்தான் கூறியிருந்தேன். அதிக மதிப்பு கொண்ட நோட்டுகளை எளிதில் பதுக்கி வைக்க முடியும். அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகமானது. அது வருத்தமாக இருந்தது.
முதல் பாகத்தின் இயக்குனர் சசி நாளை படம் பார்க்கிறார். வெற்றியடைந்ததை கேள்விப்பட்ட அவர் தொலைபேசியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சந்தோஷத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்து சந்தித்ததில் இருந்து மீண்டு வருகிறேன். தாடை மற்றும் மூக்கு பகுதிகள் சரியாக வேண்டியுள்ளது. அது சரியாகவில்லை என்றாலும் மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay Antony