விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தைவானில் நடைபெற்றுவருகிறது. ஷங்கர் இயக்கிவரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.
தைவான் படப்பிடிப்பில் நடிகர் காளிதாஸ் ஜெயராமும் இணைந்திருக்கிறார். கமலுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். ஏற்கனவே விக்ரம் படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பவுல் ஒன்றில் மிருதங்கம் போல வாசிக்கும் வீடியோவை கமல் இன்ஸ்டாகிராமில் பகிர அது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஏற்கனவே ஒரு பேட்டியில் தான் முறையாக மிருதங்கம் பயின்றதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
மற்றொரு பக்கம் கமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹெலிஹாப்டரை இயக்கும் பைலட் சீட்டில் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், 22000 அடி உயரத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
View this post on Instagram
ரசிகர்கள் பலரும் இந்த போட்டோவை பஞ்ச தந்திரம் படத்துடன் கனெக்ட் செய்துவருகின்றனர். இன்னொரு பக்கம் மேற் சொன்ன இரண்டு பதிவுகளையும் குறிப்பிட்டு தங்களுக்கு தெரியாதது ஏதாவது இருக்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan