பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது கனீர் குரலால் ரசிகர்களின் கவனம் ஈர்த்த தேனியைச் சேர்ந்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 70.
இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தில் பெற்ற பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடித்து தன் குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் செவ்வாழை ராஜூ.
பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு அட்வைஸ் பன்ன சென்று அவரிடம் கொட்டு வாங்கிட்டு வரும் காட்சி அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்தது. இந்த திரைப்படத்தில் இவர் பொணந்திண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் எஸ்.ஆர். தமிழன் ஏற்கனவே காலமாகிவிட்டார்.
Also read... 1975 இல் எம்ஜிஆர், சிவாஜியை ஓவர் டேக் செய்த கமல்ஹாசன்
செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரான வருசநாடு அருகே உள்ள கோரையூத்து கிராமத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.
கிழக்குச் சீமையிலே படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானவர் செவ்வாழை ராசு. பாரதிராஜாவின் பல்வேறு படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் செவ்வாழை ராசு நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Death, Entertainment