முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வருமான வரித்துறை சோதனை பண்ணனுமா? பொன்னியின் செல்வன் 2 ஓடுற தியேட்டருக்கு போங்க - பார்த்திபன் அதிரடி

வருமான வரித்துறை சோதனை பண்ணனுமா? பொன்னியின் செல்வன் 2 ஓடுற தியேட்டருக்கு போங்க - பார்த்திபன் அதிரடி

பொன்னியின் செல்வன் - பார்த்திபன்

பொன்னியின் செல்வன் - பார்த்திபன்

வருமான வரித்துறை சோதனை செய்ய வேண்டும் என்றால் பொன்னியின் செல்வன் 2 திரையிடப்படும் திரையரங்கிற்கு செல்ல வேண்டும் என நடிகர் பார்த்திபன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், குந்தவையாக திரிஷா, வானதியாக ஷோபிதா, பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க | கோபியை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகிய மற்றொரு நடிகர்

மணி சார் இந்தப் படத்துல எவ்ளோ உழைப்பு கொட்டிருக்காரு என்பதை விட புரமோஷனுக்கு நிறைய வார்த்தைகளை கொட்டியிருக்காரு. அவரு இவ்வளவு பேசி நான் கேட்டதே கிடையாது. சுஹாசினி கிட்டயே அவர் 3 வார்த்தை பேச மாட்டாரு.

மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் படத்தை யார் பார்த்து உங்களை பாராட்ட வேண்டும்னு நீங்க நினைக்கிறீங்க என பத்திரிகையாளர் கேட்கிறார். நீங்க தானு அவர் பதில் சொல்றாரர். இது என்னுடைய பாணி. வருமான வரித்துறை சோதனை செய்ய வேண்டுமென்றால் நாளை முதல் பொன்னியின் செல்வன் 2 படம் திரையடப்படும் தியேட்டருக்கு செல்ல வேண்டும். இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்று நம்பிக்கை உள்ளது என்று பேசினார்.

First published:

Tags: Ponniyin selvan