முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை - காரணம் என்ன?

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை - காரணம் என்ன?

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை மறுதினம் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு நள்ளிரவு காட்சிகள் சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணி முதல் திரையிடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Video: நானும் ரைடர் தான்... நேபாள ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த அஜித் - வைரலாகும் வீடியோ

மேலும் மாவட்ட ஆட்சியாளர்கள் அவர்கள் பகுதியில் உள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை அரசு வழங்கவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியில் உள்ள திரையரங்குகளை தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நுழைவு கட்டணம், வாகன நிற்கிற கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயம் செய்தபடி வசூலிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.

top videos

    பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. ஆனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை.  தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நான்கு மணிக்கு திரையிடப்படும் என படக் குழுவினர் தரப்பில் கூறுகின்றனர்.

    First published:

    Tags: Ponniyin selvan