முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மனோபாலா போல யாரும் வத்தக்குழம்பு வைக்க மாட்டார்கள் - மன்சூர் அலிகான் உருக்கம்

மனோபாலா போல யாரும் வத்தக்குழம்பு வைக்க மாட்டார்கள் - மன்சூர் அலிகான் உருக்கம்

மனோபாலா உடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அஞசலி

மனோபாலா உடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அஞசலி

இன்று நடிகர் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்படும் நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட மனோபாலா, கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்னையால் அவதிபட்டு வந்தார். அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல் நலம் தேறிய நிலையில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, மனோபாலாவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மனோபாலாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் மனோபாலாவின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிக்க :  “என்னால தாங்க முடியல.... அவன் படத்துல வன்முறைகள் இருக்காது....” - இயக்குநர் பாரதிராஜா உருக்கம்

top videos

    மேலும் இயக்குநர் பாக்கியராஜ், சங்கர், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் வந்து இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று இவரின் உடல் தகனம் செய்யப்படும் நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர், “மனோபாலா ஓர் அற்புதமான மனிதர். மாபெரும் கலைஞர். அதிகமான சங்கங்களில் பொறுப்பு வகித்தவர். நண்பர்களுக்கு உணவு வழங்கியிருக்கிறார். அவரைப் போன்று யாரும் வத்த குழம்பு அற்புதமாக வைத்துக் கொடுக்க மாட்டார்கள். அவரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

    First published:

    Tags: Actor Mansoor ali khan, Tamil Cinema, Tamil News