முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: விடுதலைக்கு பிறகு நடிகர் சூரியின் அடுத்த அதிரடி - வெளியான மிரட்டலான வீடியோ

Video: விடுதலைக்கு பிறகு நடிகர் சூரியின் அடுத்த அதிரடி - வெளியான மிரட்டலான வீடியோ

சூரி

சூரி

நடிகர் சூரி ஆக்ரோஷமாக டப்பிங் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் சூரியின் நடிப்பை பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டினர்.

தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென்னும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதன் புரமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிக்க | இந்த குழந்தை யார் தெரியுமா? இவர்தான் இப்போ டாப் நடிகை - வைரலாகும் போட்டோ!

மேலும் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலி, அஞ்சலி ஆகியோருடன் சூரி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

top videos

    இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நடிகர்கள் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் சூரி மிக ஆக்ரோஷமாக டப்பிங் பேசுகிறார். இதனையடுத்து விடுதலையைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் நடிகர் சூரிக்கு கனமான வேடம் இருக்கும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    First published:

    Tags: Actor Soori, Actress Anjali, Nivin Pauly, Yuvan Shankar raja